தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் என அனைவரும் ,மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், கொண்டாடி விளையாடி மகிழ்ந்தனர். பொங்கல் விழாவில் அனைத்து பணியாளர்களுக்கும் பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இன்று திங்கள்கிழமை 13-01-2025 போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் பரிசுகளும், அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் மஞ்சள் பையில் பொங்கல் தொகுப்பும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வழங்கினார்.
மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் இன் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா ,மருத்துவர்கள் மாரிமுத்து, ராஜலட்சுமி ,விஜயகுமார்,நிர்மல், பாலகணேஷ், செவிலிய கண்காணிப்பாளர்கள் ,செவிலியர்கள், மருந்தாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இது பற்றி மருத்துவமனை QPMS மேலாளர் ராமர் கூறும்போது,
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தொடர்ந்து பல வருடங்களாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும், அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு தொடர்ந்து பல வருடங்களாக வழங்கி வருவதாகவும் கூறினார். மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு QPMS ஒப்பந்த பணியாளர்கள் மேலாளர் ராமர் , அனைவரின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்