விவசாயிகளை வஞ்சித்த திமுக அரசு.. வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 1008 பானை மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை குற்றச்சாட்டு..

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற “நம்ம ஊரு மோடி பொங்கல்” 1008 பானை பெருவிழாவில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி. திருமாறன், அய்யாவழி ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள், பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
3000க்கும் மேற்பட்ட பெண்கள் 1008 பானைகளில் பொங்கலிட்ட இந்த பெருவிழா, காலை 8.00 மணிக்கு உறியடித்தல், எடை தூக்குதல், கயிறிழுத்தல், கரும்பு உடைத்தல், குலுக்கல் போட்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுடன் உற்சாகமாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, அக்னிபாத் பயிற்சியாளர்கள், புளியங்குடி எலுமிச்சை ஏற்றுமதி தொழில்முனைவோர், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி, “வீரமங்கை விருது” பெற்ற பெண்கள், சிறந்த சேவையாற்றிய மருத்துவ அணிகள் உள்ளிட்டோருக்கு பாராட்டு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து பெயர்சூட்டு விழாவும் நடைபெற்றது. நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.
விழாவில் முக்கிய உரையாற்றிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
“தென்காசி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான செண்பகவல்லி அணை சீரமைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், விவசாயிகளின் நம்பிக்கையை திமுக அரசு வஞ்சித்து வருகிறது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர் பேசுகையில்,“தென்காசி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு (GI) வழங்கி, விவசாயிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய பாஜக அரசே” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுக்க திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிர்வாகத் தோல்வியின் வெளிப்பாடாக, திமுக நிர்வாகியே தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இந்த நிலையை நாம் ஒன்றிணைந்து மாற்றிக் காட்டுவோம். அதற்காக வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேசியவாத சிந்தனை கொண்ட, தென்காசி மண்ணைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
உரையின் நிறைவில்,“சூரியனையும், பஞ்சபூதங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் இந்த பொங்கல் பெருவிழாவின் நன்னாளில், எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அனைத்து உயிர்களுக்கும் நலமும் வளமும் கிடைக்க வேண்டும்” என மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழ் பண்பாடு, மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்த “நம்ம ஊரு மோடி பொங்கல்” பெருவிழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் பாலகுருநாதன், அருட்செல்வன், கோதைமாரியப்பன், தீனதயாளன், ராமராஜா, பாலமுருகன், ராம்குமார், தர்மர், ராஜலட்சுமி, சண்முகராஜ், அருணாசலம், ஒன்றியத் தலைவர்கள் மகாலிங்கம், கணேசன், சிவா, ஜெயக்குமார், உதயகுமார், மாநில அணி பிரிவு நிர்வாகிகள் விவேகானந்தன், சங்கர், உத்தமன், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் விவேக், ராமச்சந்திரன், சண்முகம், குணசீலா, முத்துச்செல்வம், வேல்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கற்பகராஜ், சேகர், மணிகண்டன், முத்தமிழ்ச்செல்வன், சாமி, கருப்பசாமி, முருகன், கணேசன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்த




