தென்காசி

தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக பட்டமுடையார் புரத்தில் ஆட்டிசம் பயிற்சி மைய திறப்பு விழா

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பட்டமுடையார் புரத்தில் நவீன வசதிகளுடன் ஆட்டிசம் குழந்தைகளுக்கான பயிற்சி மைய துவக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது.

சென்னையில் பல்வேறு கிளைகள் திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் டைனி டாட்ஸ் தெரபி கேர் மற்றும் டிக்சா அகாடமி செல்லம் ஆட்டிசம் மற்றும் ஸ்மார்ட் பிரைன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து குழந்தைகளுக்கான ஆட்டிசம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குகீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் பி எம் எஸ் ராஜன் தலைமை வகித்து பயிற்சி மையத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். செல்லம் ஆட்டிசம்மற்றும் ஸ்மார்ட் பிரைன் நிர்வாக அதிகாரி ஜெமிலா லாரன்ஸ் கோவை பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேசன் தலைவர் தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செல்லம் ஆட்டிசம் மற்றும் ஸ்மார்ட் ப்ரைன் சேர்மன் ஜெஸி வரவேற்புரை ஆற்றினார். டைனி டாட்ஸ் சேர்மன் வின்சென்ட் சேவியர் ஆட்டிசம் பற்றிய விளக்க உரை ஆற்றும் போது ஆட்டிசம் என்பது 30 வருடங்களுக்கு முன் இந்தியாவில் அறியப்படாத ஒரு குறைபாடாகவே இருந்தது. ஆனால் இன்று 30 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுகிறது. இன்று பெரும்பாலானோருக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அவர்களது உறவினர்கள் அல்லது நட்பு வட்டத்தில் ஏதாவது ஒரு குழந்தையாவது ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளின் அழுகையை நிறுத்த கைபேசியை கொடுத்து விடுகிறார்கள். இதனால் குழந்தைகள் பிறர் பேசுவதை கேட்பது தடைபடுகிறது. அது மட்டுமல்லாமல் தனி குடித்தனம் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடாததால் குழந்தைகள் பேச கற்றுக் கொள்வது தடைபடுகிறது.

மேலும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் போது அக்குழந்தை கேட்பதைப் பெற்றோர்கள் கொடுப்பதால் குழந்தைகளுக்கு பிடிவாத குணம் ஏற்படுகிறது. பிடிவாதம் செய்யும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொல் பேச்சை கேட்பதில்லை. இதனால் கற்கும் திறன் பாதிப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் தனிமையில் விளையாடுவதால் பிற்காலத்தில் பேச்சுத் திறன் மற்றும் பிற குழந்தைகளுடன் பழகும் தன்மையை இழந்து தனிமையில் வாழ பழகி விடுகிறார்கள். இந்த குழந்தைகளை சரியான நேரத்தில் சரியான பயிற்சி கொடுக்காமல் தாமதப்படுத்துவதால் வாழ்நாள் முழுவதும் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் சுமையாக மாறுகிறார்கள்.

அதுவே சரியான தருணத்தில் பயிற்சி மேற்கொண்டால் அறிஞர்கள் விஞ்ஞானிகளாகவும் சமுதாயத்திற்கு பயன் உள்ளவர்களாகவும் மாறுவார்கள் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி நேசம் நர்சிங் காலேஜ் சேர்மன் ஹனிபா, செல்லம்ஆட்டிசம் மற்றும் ப்ரைன் மேலாளர், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்செல்லம் ஆட்டிசம் மற்றும் ஸ்மார்ட் ப்ரைம் சேர்மன் ஜெஸி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button