தென்காசி

தென்காசியில் இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் (INTUC) சங்கத்தின் 3 நாள் பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் (ஐ என் டி யு சி ) தொழிற்சங்க செயல் வீரர்களுக்கான பயிற்சி வகுப்பு செப்டம்பர் 12 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் 14ஆம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் ஜெகநாதன் துவக்க உரையாற்றினார்.

செயல் தலைவர் ஆதிகேசவன் தொழிற்சங்க வரலாறு குறித்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். மதியம் சமூக பாதுகாப்பும் இஎஸ்ஐ திட்டத்தின் பயன்களும் பற்றிய விரிவுரையினை சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலக துணை இயக்குனர் அருள்ராஜ் வழங்கினார். திருநெல்வேலி போக்குவரத்து பேரவை பொதுச் செயலாளர் உமாபதி சிவன், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க வளர்ச்சியில் காளன் அவர்களின் பங்கு பற்றி பேசினார். தொழிலாளர் சட்டங்களும், தொழில் நீதிமன்றமும் குறித்து பொதுச் செயலாளர் அருள் பிரசாத் விளக்கமளித்தார்.

2 ஆம்நாள் நிகழ்ச்சியான இன்று சிம்சன் குரூப் ஓய்வு பெற்ற மனித வள மேலாளர் சிவராம் பாபு தொழில் உறவு மேம்பாட்டில் சங்கம் மற்றும்நிர்வாகத்தின் பங்களிப்பு பற்றி கூறினார். ராஜமாணிக்கம் சமூக பாதுகாப்பில் தொழிலாளர் நலன் பிராவிடண்ட் பண்ட் மற்றும் பென்ஷன் பற்றி விரிவுரை ஆற்றினார். மோகன்தாஸ் இன்றைய அரசியலும் தொழிற்சங்கத்தின் நிலையும் குறித்தும், செயல் தலைவர் முருகேசன் தொழிலாளர் நலனில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்கு பற்றியும் சிறப்புரை ஆற்றினர்.

3வது நாள் நிகழ்ச்சியாக நாளை என்ஆர். மணி தொழிலாளர் நல சட்டங்கள் பற்றிய விளக்க சிறப்புரையும், ஞானசேகர் தொழிற்சங்க தலைமைக்கான தகுதியை வளர்ப்பது குறித்தும் சிறப்புரை ஆற்றுகின்றனர். பயிற்சியாளர்களின் மதிப்பீடு மற்றும் நிறைவு விழாவும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டை ஆறுமுகம், மனோகரன், கதிர்வேல், பிரபாகரன், ஸ்டீபன், மூர்த்தி, முரளி, பிரவீன்குமார், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : முஸ்தாக் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button