தென்காசி

தென்காசியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உஜ்ஜீவன் வங்கி சார்பில் 2 பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி 

தென்காசி நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தென்காசி உஜ்ஜீவன் வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சிக்கு இரண்டு பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி தென்காசி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்தத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை களை மேம்படுத்துவதன் மூலமும், தூய்மையை அதிகரிப்பதன் மூலமும், நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புக்கு பங்களிப்பதன் மூலமும் உள்ளூர் சமூகத்திற்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம், பொது நலப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2 பேட்டரி வாகனங்களை நகராட்சிக்கு வழங்கும் வகையில் தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி உஜ்ஜீவன் வங்கியின் விநியோக மேலாளர் சுரேஷ் முருகேசன் தலைமை தாங்கினார்.

தென்காசி உஜ்ஜீவன் வங்கியின் கிளஸ்டர் தலைவர் (கிளை வங்கிச் சேவை) மணிகண்டன், உஜ்ஜீவன் வங்கியின் பகுதி மேலாளர் (நுண் வங்கிச் சேவை) காளிதாஸ், உஜ்ஜீவன் வங்கியின் தென்காசி கிளை மேலாளர் (கிளை வங்கிச் சேவை) என்.தங்கராஜ் தென்காசி உஜ்ஜீவன் வங்கியின் பகுதி மேலாளர் (தங்க கடன்) எஸ்.ஜெயசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் சாதிர், தென்காசி நகராட்சி ஆணையாளர் எஸ். ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலர் எஸ்.முகமது இஸ்மாயில், நகராட்சி மேலாளர் எஸ். ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தென்காசி உஜ்ஜீவன் வங்கி சார்பில் இரண்டு பேட்டரி வாகனங்களை நகர்மன்றத் தலைவர் ஆர் சாதிர், நகராட்சி ஆணையாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.அதனைப் பெற்றுக்கொண்ட நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர் ஆகியோர் தென்காசி உஜ்ஜீவன் வங்கிக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ் முகமது இஸ்மாயில், தென்காசி நகராட்சி அலுவலக மேலாளர் எஸ். ரத்தினம், மற்றும் நகராட்சி ஊழியர்கள் தென்காசி உஜ்ஜீவன் வங்கியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button