தென்காசி : உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு

தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலங்குளம், கடையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலங்குளம், கடையம் ஆகிய பகுதிகளில் இன்று (16.07.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது
தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் ” உங்களுடன் ஸ்டாலின்” முகாம் சுரண்டையில் வார்டு எண் 1, 4,5 ஆகியவற்றிற்கான முகாம் சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில் கலையரங்கத்திலும், ஆலங்குளத்தில் வார்டு எண் 1,7 ஆகியவற்றிற்கான முகாம் ஆலங்குளம் வார்டு எண் 12 அண்ணா நகர் மெயின் ரோடு சமுதாய நலக்கூடத்திலும், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கான முகாம் கடையம் சைவ வெள்ளாளர் திருமண மண்டபத்திலும் , கடையநல்லூரில் வேலாயுதபுரம் இ-சேவை மையத்திலும், குருவிகுளத்தில் கலிங்கப்பட்டி கீழத்தெரு சமுதாய நலக்கூடத்திலும், மேலநீலிதநல்லூரில் ஈச்சந்தா பெரியசாமிபுரம் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது .
இம்முகாமில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை என 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு செயலாக்கத்திட்டத்துறை மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) பெறுவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
இந்த முகாம்களில் மருத்துவ சேவை வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. காவல்துறையினரால் “May I help you” தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பொதுமக்கள் அவர்களது பகுதிகளில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.