தென்காசி
கடையநல்லூரில் ரூ. 31 லட்ச திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் அருகே மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்கும்,
மேல கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் அருகே ரூபாய் 15 லட்சத்திற்கு பன்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டுதல் மற்றும்
கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிக்கு 6 லட்சம் என மொத்தம் 31 லட்சத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் இன்று நடைபெற்றது.