கவர்னருக்கு எதிரான தீர்ப்பு.. செங்கோட்டையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பல்கலைக்கழக நியமனங்களில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்,
மாநில சுயாட்சியை நிலை நிறுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று (08/04/2025) மதியம் 02.00 மணிக்கு நகர திமுக சார்பில், நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில், நகர கழக நிர்வாகிகள் முன்னிலையில் தீர்ப்பை வரவேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர நெசவாளர் அணி அமைப்பாளர் காந்தி பாபு என்ற அப்துல் ரஷீத், பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, நகர துணை செயலாளர் ராஜா, வார்டு கழக செயலாளர்கள் சேட் என்ற சேக்மதார், கோவிந்தராஜ், இப்ராஹிம், வேலுமணி, நகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகம்மதுகரீம்,
நகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இப்ராஹிம், கழக பேச்சாளர் செங்கை குற்றாலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி பீட்டர் ஜேசுராஜ், ஆட்டோ மாரியப்பன், முத்து மாரியப்பன், சங்கர் கணேஷ், பிச்சையா, மனோஜ், டைமண்ட் சலீம், பீரப்பா, மாடசாமி, கொட்டாகுளம் கிளைக் கழக செயலாளர் பரமசிவன், முகம்மது உட்பட கழக முன்னோடிகள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.