தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது

நேற்று 02.04.25ஆம் தேதி பகலில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் மற்றும் தலைமை காவலர் மாரிமுத்து , உதயசங்கர் ஆகியோர் திருச்சி இருப்பு பாதை மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி உட்கோட்ட இருப்பு பாதை துணை காவல் கண்காணிப்பாளர்,மற்றும் அதிகாரிகளின் உத்தரவுபடி மதுவிலக்கு, ரேஷன் அரிசி கடத்தல் லாட்டரி சீட்டு வியாபாரம் சம்பந்தமாக கண்காணித்து ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை. மேலரத வீதி.சிவனு நாடார் மகன் முருகன் 45/25 என்பவர் சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2,400 மதிப்புள்ள 60 லாட்டரி டிக்கெட் டுகளை, விற்பனைக்கு வைத்திருந்ததால் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.