தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணையும் விழா

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 25 பேர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனையொட்டி தென்காசி நகர தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவர் NM அபுபக்கர் MC தலைமை தாங்கினார். நகர செயலாளர் M.அப்துல்காதர் நகர பொருளாளர் யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மாவட்ட தலைவர் M.அப்துல் அஜீஸ் மாவட்ட செயலாளர் V.A செய்யது பட்டாணி மாவட்ட இளைஞர் அணி தலைவர் VAS செய்யது அபு தாஹீர் மாநில விவசாய அணி செயலாளர் தென்காசி M.முகம்மது அலி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.
தென்காசி ஜபார் தலைமையில் 25 க்கும் மேற்பட்டோர் தங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் PM ஜலால் ஹமீது STu காசீம் காயிதேமில்லத் நற்பணி மன்றம் யாஸீன் மற்றும். மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்